பக்கம்:திருமாவளவன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிநாடும் கரிகாலனும் 79

போக்குவரத்துக்குரியனவாய் அமைந்தனவாகும். இவை களும் பலமாதங்கள் வரை பனிமூடப்பெற்று அடைபட்டுக் கிடத்தலால் சில காலங்களே அப்போக்கு வரத்துக்கு ஏற்ற வாகின்றன....வங்காள மாகாணத்தில் அடங்கியுள்ள வச்சிா மகத நாடுகளுக்கு வெகுதுரமில்லாததாய், இமயத்தைக் கடந்து செல்வதற்கு ஏற்ற வழியுடைய பிரதேசங்களுள் வலிக்கிம், புட்டான்களுக்கு இடையிலுள்ள கணவாய்களே சிறந்தவை. வலிக்கிம் ராஜ்யத்துக்குக் கிழக்கே, அதற்கும்

- திபெத்துக்குமுள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத் தொடரானது செங்குத்தாய் ஆகாசத்தை அளாவிக் கொண்டு பெருங் கோட்டைமதில்போல் நீண்டு செல்கின் றது. இம்மலைத்தொடரை அடுத்துச் செல்லும் கணவாய் சமுத்திர மட்டத்துக்குமேல் 14,500 அடி உயரமுடைய தாய், திபெத் பிரதேசமாகிய சும்பிப் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோய்விடக்கூடியது. இம்மலைக்கும், இதனையடுத்த கணவாய்க்கும் வழங்கும் பெயர்கள் கவனிக்கத்தக்கன. சோழ மலைத்தொடர் (Chola Range) சோழர் கணவாய் (Chola Pass) என்பன, அவற்றிற்கு இன்றும் வழங்கி avajo or loss garröth. (a) Imperial gazetteer of India: Sikkim: Vol. 10: page 327; Vol. 22: page 365. (b) Hand gazetteer of India: Chola Pass. (c) Encyclopaedia Britannica: Sikkim Vol 5: P. 667, Vol. 20. P. 640)மேற் கூறியவற்றைக் கொண்டு நோக்குமிடத்து இமயப்பகுதி யொன்றற்கு வழங்கும் இப்பெயர், சோழன் தொடர்புபற்றி வந்ததாகக் கூடாதோ என்பதே என் ஆராய்ச்சி, இம்மலையடியாகவே இதனையடுத்துள்ள கண வாயும் அப்பெயர் பெற்றதாகவேண்டும். ‘Garan' (Chola) என்பதற்கு வலிக்கிம் திபெத் பாஷைகளில் வேறுபொருள். இருப்பதாகத் தெரியவில்லை; "லா” என்பதற்குத் திபெத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/91&oldid=578865" இலிருந்து மீள்விக்கப்பட்டது