பக்கம்:திருமாவளவன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருமாவளவன்

பாஷையில் கணவாய் என்ற பொருள் உண்டு. நது-லா (Natu-la) ஜெலப்-லா (jelap-la) எனக் காண்க. ஆல்ை, **ΟΕ στου (Chola) என்பது அவ்வாறு இரு சொல்லுடைய தன்றி, ஒரு சொல்லாகவே மலைக்கு வழங்கி வருவதும், அச்சொற்கு வேறு பொருள் காணுமையும் நோக்கத் தக்கன. அதனல், திருமாவளவன், அப்பிரதேசத்தைக் கைப்பற்றி ஆண்டுள்ள மலைச்சிகரத்தில் தன் புலிப்பொறியை நாட்டி அங்கே தன்னுணையை நிறுவிய காலமுதலே, அம் மலே அவ்வாறு பெயர் பெற்றது பேர்லும் என்று கருத இடம் தருகிறது இமயத்துக்கப்பாலும் அவ்வளவன் செல்லக் கருதியிருந்ததை அம்மலை தடுத்துவிட்டதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டதற்கு, மேற்குறித்தபடி அச்சோழன் சென்ற காலத்தே பணியால் முழுதும் மூடப் பட்டு அக்கணவாய் அடைபட்டிருந்தது என்பதே கருத்துப்போலும்” என்று திரு. மு. இராகவையங்கார வர்கள் அறிந்து கூறிய பகுதியாலும் கரிகாலன் வட நாட்டுச் செலவு உறுதி செய்யப்படுதல் காண்க -

இதுகாறும் கூறியவாற்முன், கரிகாலன், காஞ்சியைச் சூழ்ந்த நாடுகள் உட்படத் தமிழ்நாடு அனைத்தையும் வென்ருன் என்பதும், அவன் காலத்தில் த்ொண்டை யோரும், திரையரும் தோன்றவில்ல்ை என்பதும், அவனுக் குப்பின் தோன்றிய அவர்கள் அவனுக்குப் பிறகு காஞ்சியைச் சூழ்ந்த நாட்டை ஆண்டனர் என்பதும், தமிழ்நாடு முழுதும் வெற்றிகொண்ட கரிகாலன், வடநாடு சென்று ஆங்குச் சில அரசர்களை வென்ற பெரும் பொருள் கைப்பற்றி மீண்டான் என்பதும் உறுதி செய்யப்பட்டன். * * * : , ‘

Tರ್ಫ಼[93]VāīF. कुछ,ल्लस्य

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/92&oldid=578866" இலிருந்து மீள்விக்கப்பட்டது