பக்கம்:திருமாவளவன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கரிகாலனும் காவிரியும்

கரிகாலன், காவிரிக்குக் கரைகட்டி அணை அமைத்த வரலாறு, கரிகாலன் வரலாற்றை ஆராய்வார் அறிவிற்குத் தெளிவு அடையாத நிகழ்ச்சியாகவே உளது. கரிகாலன் கரை அமைத்த வரலாறு, அவனைப் பாராட்டிய பழம் பெரும்புலவர் ஒருவரானும் குறிப்பிடப்படவில்லை. ஏழு அல்லது எட்டாம் நூற்ருண்டைச் சேர்ந்த தெலுங்குச் சோழ அரசன் புண்யகுமாரனுடைய மாலேபாடு செப் GL@se, Arif (The Malepadu plates of Punyakumara) கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்த வரலாற்றை முதன் முதலாகக் குறிப்பிடுகின்றன. அவற்றைத் தொடர்ந்து விஜயாலயன் வழிவந்த முதலாம் இராஜேந்திரனுடைய (கி.பி.1012-1044) திருவாலங்காட்டுச் செப்பேடுகளும், லார்ஜர் லெய்டன்’ குழுவைச் சேர்ந்த செப்பேடுகளும், (The larger Leyden grant, V. II), a94ân LeGaryesir உலாவும் அவன் காவிரிக்குக் கரை அமைத்த வரலாற்றைக் குறிப்பிடுகின்றன: கூறப்பட்ட சான்றுகள் அனைத்தும் காவிரிக்குக் கரை அமைத்தான் கரிகாலன் என்றுதான் குறிப்பிடுகின்றன; அமைத்த வழிமுறைகளைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

கரிகாலன், தன் பகையரசர் துணைகொண்டே கரை கட்டின்ை என்று முதல்முதல்கூறிய சான்று, வீர ராஜேந்திரனுடைய (1064-69) கன்னியாகுமரிக் கல் வெட்டுக்களே ஆகும். அவையும், "பகையரசர் துணை கொண்டு,'எனப் பொதுப்படையாகத்தான் குறிப்பிடு கின்றன. பிறவிளக்கம் ஒன்றும் தரவில்லை. -

1. தெள்ளருவிச் -

சென்னிப் புலியே மிருத்திக் கிரி கிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதி-விக்கிரமசோழன் உலா: 24-26 - தி.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/93&oldid=578867" இலிருந்து மீள்விக்கப்பட்டது