பக்கம்:திருமாவளவன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருமாவளவன்

குலோத்துங்கச் சோழன் உலா, கரிகாலன் தோற்ற பகைமன்னர் துணைகொண்டே காவிரிக்குக் リのエ0与“ கட்டின்ை எனவும், அவ்வாறு கட்ட வாராத மன்னன் ஒருவன் கண்னைப் போக்கினுன் எனவும் குறிப்பிடுகிறது’ இங்கும் வாராதான் யார் ? அவன் கண்ணைப் போக்கிய முறை யாது என்ற விளக்கங்கள் தரப்பெறவில்லை.

கலிங்கத்துப் பாணி, பகைமன்னர் துணைகொண்டு காைஅமைத்தான் எ ன் று கூறுவதோடு, அவ்வாறு வாராதான் 'முகரி” என்பவன் எனவும், அவன் உருவைப் படத்தில் எழுதிநோக்க, அதில் அவனுக்கு மூன்றுகண் இருப்பது கண்டு, இதுவே அவன் வாராமைக்குக் காரண மாகும் என்று கொண்டு படத்தில்உள்ள அம் மிகைக் கண்ணே அழிக்க, அவனுடைய உண்மைக்கண் போயிற்று எனவும் கூறுகிறது."

1. தலையேறு

மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான் கண்கொண்ட சென்னிக் கரிகாலன்',-குலோத்துங்கச் சோழனுலா: 34-36. 2. தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்

தொடர வந்திடா முகரியைப் படத் தெழுது கென்று கண்டு இது மிகைக்கண் என்று இங்க ழிக்கவே அங்கழிந்ததும்"-கலிங்கத்துப்பாணி: 184 "மன்னர்களே கட்டத்தொடங்கிய காவிரிக்கரை அமைப்போடு தொடர்ந்து வாாத முகரியைப் படத்தில் எழுதி நோக்கி அவ்வாறு அது தொடாவாாாமைக்குக் காரணம் அப்பகுதியில் உள்ள மூன்று கண்களில் ஒருகண் (அணைகளின்கீழ் நீர்போகும் வழிக்குக் கண் என்பது பெயர்) மிகுதியாக இருப்பதே என்று அறிந்து அம்மிகைக் கண்ணைக் கரிகாலன் படத்தில் அழிக்க, அங்கு-முகரியில்-அம் மிசைக்கண் அழிக்கப்பட்டது,” என்று பொருள் கூறுவர் திருவாளர் கனகசபை அவர்கள். —Indian Antiquary, Vol XIX. P. 331.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/94&oldid=578868" இலிருந்து மீள்விக்கப்பட்டது