பக்கம்:திருமாவளவன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருமாவளவன்

நவ சோழ சரிதம்' என்ற தெலுங்கு வீர சைவ நூல் ஒன்று, ஒருநாள் கரிகாலன் காவிரி ஆற்றை அடுத்த காட் டில் வேட்டையாடிக், களையாறச் சிறிது நேரம் காவிரிக் கரையில் தங்கினன்; அப்போழ்து, காவிரியின் இருமருங் கும் கரை அமைத்து நீரைத் தேக்கினல், சோழநாட்டு வளம்பெருகும் என்ற எண்ணம் அவனுக்கு உண்டா யிற்று; உடனே தன் ஆணைக்கடங்கிய அரசர் அனைவரை யும் காவிரிக்குக் கரை அமைக்குமாறு பணித்தான்; முக்கண்டிசோழன், பாஸ்காசோழன் என்ற இருவர் நீங்க, ஏனையரசர் அனைவரும் பணியை ஏற்று நடத்தினர்; வாராத அவ்விருவர்மீது, கரிகாலன் படையொடு சென்று, அவர் களே வென்று, கைப்பற்றிக் கொணர்ந்து, கரை அமைப்பு வேலை முடியும்வரை தொழிலாற்றச் செய்தான் என்ற வர லாற்றைக் கூறுகிறது.

தெலுங்குச் செப்பேடுகளும், கல்வெட்டுக்களும், கரி காலன் காவிரிக்குக் கரை அமைத்தான் எனவும், திரிநேத் திாபல்லவன், கரிகாலன் காலத்தில் வாழ்ந்து, அவளுல் கண்ணிழக்கப் பெற்ருன் என்றும் குறிப்பிடுகின்றன.

மகாவம்சம் என்ற இலங்கை வரலாற்றுத் தொகுப்பு நூல், கரிகாலன், இலங்கைமீது படையெடுத்துச் சென்று, ஆங்குப் போரில் தோற்ற பல ஆயிரம் வீரர்களைக் கைப் பற்றிக் கொணர்ந்து, அவர்களைக் கொண்டு காவிரிக்குக்

கரை அமைத்தான் எனவும், இலங்கை அரசன் கயவாகு,

1. சரண - சரோருஹ - விகத - விலோசன - பல்லவ கிரிலோ சன பிரமுகாகில-பிரிதிவீஸ்வர - காரித காவேரி ரே கரிகாலஇதன் பொருள்: “தாமரை மலர்போன்ற தன் தாள்களால், கண் அழியப்பெற்ற பல்லவ கிரிலோசனனைத் தலைமையாகக் கொண்ட பகைமன்னர்களால் காவிரியின் கர்ை அமைத்த கரிகாலன்" என்பது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/96&oldid=578870" இலிருந்து மீள்விக்கப்பட்டது