பக்கம்:திருமாவளவன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனும் காவிரியும் 85.

கள்ளிருள் யாமத்து நகர்சோதனை செய்துவருகின்ற போது கரைத்த முதுமகள் ஒருத்தி பெருங்குரற் பாய்ச்சி அழிக்கண்டு, அன்னவள் இன்னலுக்கு ஏது, பன்னெே நாளேக்கு முன்னர்ப் படையெடுத்துப் போக்த கரிகால் வளவன், சிங்களக்குடிகள் பலவற்றைச் சிறைப்படுத்திச் சென்ற ஞான்று தன் குடிக்கு ஒரு மகனேயும், தான் கொண்டு போயினமையே எனக் கேட்டுச் சோணுட்டின் மீது படையெடுத்து வந்து தன் நகர்க்குடிகளைச் சிறையி னின்றும் விடுவித்தனன் என்றும் கூறுகிறது. 'இராஜ சத்ணுகரி” என்ற நூல், காவிரியில் கரை அமைக்க இலங்கைவீரர்கள் தாங்களாகவே விரும்பிச் சென்றனர். என்று கூறுகிறது. - - 'முகரி” என்பது அரசன் ஒருவன் பெயராக வேண்டு மென்றும், அவன் பெயரால் முகரி என்ற ஊர் உண்டா யிற்றென்றும் அரும்பத விளக்கத்த எழுதியவாறு கருது தற்கு ஆதாரம் குறிக்கப்படாமையால், அங்ானமே துணியக்கூடவில்லை. இங்கினமன்றி, வங்காளப் பிரதேசத் தில் ஆட்சிபுரிந்த மெளகரிகள் என்ற அரச வகுப்பின ருள் ஒருவனேக் குறிப்பதாகக் கருதுவதும் ஏற்புடைத் தன்று....சயங்கொண்டாரும், கூத்தரும் தங்காலத்துச் சாசனங் கூறும் வரலாறுகளைத் தழுவியே பாடுதலும், அச்சாசனத்துக் கண்ட திரிலோசனனேயே, திரிகேத்திர பல்லவன் என்று மற்ருெரு சுலோகம் வழங்குதலும் மேலே தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அதனல், அப். பகையரசன் பல்லவ மரபினன் என்று அறியக் கிடத்த லின், மெளகரிய மரபுடன் அவனை இணைப்பதற்குச் சிறிதும் இடமில்லை. முகரி எனத் தமிழ்விகுதி பெற்ற வடசொல் ஆரவாரிப்போன்' என்ற பொருளுடையதாம்.

1. Upham’sh Maha - Vamsam Vol I. P. 228.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருமாவளவன்.pdf/97&oldid=578871" இலிருந்து மீள்விக்கப்பட்டது