பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலே

நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி - மதவலி கிலே இய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரை இய து வெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறு பசு மஞ்சளொடு ஈறு விரை தெளித்துப் பெருந்தண் கணவீர கறுந்தண் மாலே துணைஅற அறுத்துத் தாங்க காற்றி நளிமலைச் சிலம்பின் கல்நகர் வாழ்த்தி கறும் புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க உருவப் பல்பூத் துாடய் வெருவாக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக முந்து கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து லேப் பைஞ்சுகின ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலே மகள் மகனே மாற்ருேர் கூற்றே

13

230

235

240

345

250

255