பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை

1-8. உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழும்படியாக மேருவுக்கு வலப்பக்கமாக எழுந்து சுற்றுவதும், பலரால் புகழப் பெறுவதும் ஆகிய சூரி யன் கீழகடலிலே தோன்றிற்ைபோல, 5டுவிலே நிற்ப தில்லாமல் விளங்குவதும் கெடுந் துரத்திலும் வீசுவது

மாகிய ஒளியையும்; - -

4-6. தம்பால் வந்து சரண் அமை, ந்தவர்களே ப் பாதுகாக்கின்ற, அறியாமையை உடைக்கும் வலிமை யையுடைய திருவடியையும் எதிர்த் துப் போர்செய் வாரை அடியோடு அழித்த, இடியைப் போன்ற விசா லமான கையையும் உடையவன்; குற்றம் இல்லாத கற்பையும் ஒளிபொருந்திய நெற்றியையும் உடைய

தேவயானைக்குக் கணவன்;

7-11. கட லே முகந்த நிறைந்த கருப்பத்தை உடைய கரிய மேகமானது, ஒளியால் போமுப்படும் வானத்தில் வளப்பமான நீர்த்துளியைச் சிதறி முதல் மழையைப் பெய்த, குளிர்ந்த கறுமணம் வீசும் காட் டில், இருள் உண்ட்ாகும்படியாகச் செறிந்த பருத்த அடிமரத்தையுடைய செங்கடம்பினது உருளுகின்ற குளிர்ந்த மாலே புரளுகின்ற திருமார்பை உடையவன்; 12-19. பெரிய மூங்கில்கள் வளர்ந்து வானளவும் உயர்ந்த மலேயில்-கிண் கினி சூழ்ந்த ஒளிபடைத்த சிவந்த சிறிய அடி, திரண்ட கால், வளைந்த இடை, பெரிய தோள்கள், இந்திர கோபத்தைப் போன்ற சாயங் தோய்க்காமல் இயற்கையாகவே சிவந்த பூ