பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருமுருகாற்றுப்படை

கமழும் மருதம் பூவைப்போல லேசாகக் கோங்கிலவின் அரும்பைப்போன்ற தனத்திலே பூசி, விரிந்த வேங்கை மலரின் நுண் ணிய மகரந்தப் பொடியை மேலே அப்பி, கண்டு மகிழ்வதற்கு ஏற்றபடி விளா மரத் தின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்து, கோழி ஓங்கி யதும் பகைவரை வென்று சங்காரம் செய்யும் வெற் றியை அறிவுறுத்துவது மாகிய கொடி கெடுங்காலம் வாழ்க என்று வாழ்த்தி, பலர் ஒருங்கே கூடி, சிறப்புத் திகழ்கின்ற மலைப்பக்கமெல்லாம் எதிரொலி செய்யும் படியாகப் பாடி, தெய்வப் பெண்கள் ஆடும் சோலை களே உடைய, குரங்கும் அறியாத மரங்கள் நெருங்கி யுள்ள மலேப்பக்கத்தில் வளர்ந்த வண்டுகளும் மொய்க் காத விளக்கைப் போன்ற காந்தளாலாகிய பெரிய குளிர்ந்தகண்ணியைஅணிந்ததிருமுடியைஉடையவன்;

45-61, பாரில் முதிர்ந்த குளிர்ச்சிய்ையுடைய கட லானது கலங்கும்படியாக அதனுள்ளே புகுந்து, சூர கிைய அசுரர் தலைவனைக்கொன்ற சுடர் விடுகின்ற இலையை உடைய நெடிய வேலாலே, உலர்ந்த மயிரை யும் கோணியுள்ள பல்லேயும் ஆழமான வாயையும் சுழல்கின்ற விழியையும் பசிய கண்ணேயும் பயத்தைத் தரும் பார்வையையும் கழன்ருற் போன்ற கண்ணே யு டைய கோட்டானேடு கூடிய பாம்பு தொங்கப் பெரிய தனத்தை மோதுகின்ற காதையும் சொர சொரப்பை உடைய உடம்பையும் அச்சம் உண்டாக்கும் நடையை யும் உடைய பயங்கரமான பேய்மகள் ரத்தம் அளேத்த கூரிய நகத்தையுடைய விரலாலே கண்ணேத் தோண்டி உண்ட மிக்க காற்றத்தை யுடைய கரிய தலையை ஒள்ளிய. வளையை அணிந்த வளைந்த கையால் எந்திக் கண்டார் அஞ்சும்படியாக, வென்று அட்ட போர்க்