பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை 9

களத்தைப் பாடித் தோளே வீசி கிணத்தைத் தின் னும் வாயையுடையவளாய்த்துணங்கைக் கூத்து ஆடும் படி ப்ாக, இரண் டு பெரிய வடிவை உடைய ஒரு பெரிய சூானது உடம்பானது அஞ்சும்படி ஆறு வேறு உரு வத்தோடு சென்று, அசுரர்களுடைய நல்ல வெற்றி கெட்டுப் போகும்படி, தலைகீழாகக் கவிழ்ந்த பூங் கொத்துக்களே உடைய மாமரத்தை அழித்த, குற்ற மற்ற வெற்றியையும், யாராலும் அறிதற்கரிய நல்ல புகழையும் உடைய செவ்வேற் சேய் (ஆகிய முருகனு னுடைய); - -

63-66 சிவந்த திருவடியிலே செல்லும் பெரு மையை உடைய உள்ளத்தோடும், தன்மை செய்கின்ற தீர்மானத்தோடும், உன் காட்டைப் பிரிந்து தங்குவதற் குரிய பிரயாணத்தை நீ விரும்பியைானல், நல்ல கெஞ் சில் எண்ணிய இனிய விருப்பங்கள் யாவும் ஒருங்கே நிறைவேற, நினைத்த காரியம் இப்போதே கைகூடப் பெறுவாய்:

67-71. போருக்கு வருக என்று அறை கூவிக் கட்டிய, கெடுந்தாரம் உயர்ந்த கொடிக் கருகே, வரிந்து புனேயப் பட்ட பந்து பாவையோடு தொங்க, யுத்தம் செய்பவரை ஒடுக்கிய போர் இல்லாத வாயிலே யும், திருமகள் வீற்றிருந்த குற்றமற்ற அங்காடி விதி யையும், மாடங்கள் மலிந்த வீதியையும் உடைய கூடல்மா நகரத்துக்கு மேற்கே; -

73-77 கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளேயுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலேயில்தேன் பரந்த செய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணேப்போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள