பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருமுருகாற்றுப்படை

மலர்களிலே சிறைகளையுடைய வண்டினது அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங் குன்றத்தில் (முருகன்) வீற்றிருத்தலேயும் உடையவன்; அது மட்டும் அன்று. -

78-82. அங்குசத்தின் கூர்மையான நுனி பதிந் தமையால் உண்டான தழும்பு உள்ள வரிகளையுடைய குெற்றியில், வாடாத பொன்னரி மாலே பட்டத்தோடு அசைய, மணிகள் மாறி ஒலிக்கும் பக்கங்களேயும், வேக மாகிய நடையையும், யமனப்போன்ற தடுப்பதற்கரிய வலிமையையும் உடைய, காற்று எழுந்தாற் போன்ற யானையின் மேலே ஆரோகணித்து; -

8ே-88. ஐந்து வேறு உறுப்புக்களே உடையதும், செய்யவேண்டிய வேலைப்பாடுகள் கிரம்பியதுமாகிய கிரீடத்தில், விளங்கும் சிறத்தால் வெவ்வேருக மாறு பட்ட அழகிய மணிகள் மின்னல் விட்டு விளங்கி மின் னுவதைப் போல முடியிலே பிரகாசிக்க, ஒளி தங்கி அசையும், கூறுபாடுகள் அமைந்த பொன்னல் ஆகிய மகா குண்டலங்கள், வானத்திலே விளங்கும் தன்மை யையும் ஒளியையும் உடைய சந்திரனைச் சூழ்ந்து அகலாத கட்சத்திரங்களேப்போல விளங்கி மின்ன;

89-108. கேடில்லாத விரதத்தையுடைய தம் தவமாகிய தொழிலை நிறைவேற்றும் ஆற்றல் பெற்ற முனிவர்களுடைய மனத்திலே பொருந்தித் தோன்று கின்ற ஒளியும் நிறமும் பொருந்திய முகங்களுக் குள்-பெரிய இருள் படைத்த உலகம் குற்றம் இல்லா மல் விளங்கும் படியாகப் பல கிரணங்கள் விரிந்து விளங்குவது ஒருமுகம்; ஒருமுகம், அன்புடையவர் துதிக்க, அவர்களுக்கு ஏற்கும்படியாகப் பொருந்தி இனிதாகச் சென்று விருப்பத்தோடு மகிழ்ந்து வரத்