பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 திருமுருகாற்றுப்படை

ஒருகை திருமார்பில்(மோனமுத்திரையோடு)விளங்க, மற்ருெரு கை மாலேயோடு விளங்க,ஒரு திருக்கை கீழே நழுவுகின்ற வளேயோடே மேலே சுழல, மற்ருெரு கை இனிய ஓசையை உடையதாக ஒலிக்கும் மணியை மாறி மாறி ஒலிக்கும்படி செய்ய, ஒரு கை நீலகிற வானத்திலிருந்து மிக்க மழையைப் பொழியும்படியா கச் செய்ய, மற்ருெரு கை தேவப் பெண்களுக்கு மண மாலேயைச் சூட்ட-அவ்வாறு அந்தப் பன்னிரண்டு திருக்கரங்களும் முகங்களுக்கு ஏற்ற வகையிலே பொருந்தச் செயல்களைச் செய்து;

119-135. வானத்து இசைக் கருவிகள் முழங்க, திண்ணிய வயிரத்தையுடைய கொம்புகள் உச்ச ஒலி யோடு ஒலிக்க, வெண்சங்குகள் சப்திக்க,வன்மையைத் தன்னிடத்திற் கொண்ட இடியைப் போன்ற முரசம் ஒலிப்பதோடு பல பீலிகளையுடைய மயிலாகிய வெற் றிக்கொடி அகவ, ஆகாயமே வழியாக விரைந்து செல்லுதலேத் திருவுளத்தே கொண்டு, உலகம் புகழ் கின்ற மிக உயர்ந்த மேலான சிறப்பையுடைய அலை வாய்க்குச் சென்று தங்குதல் அவனுக்கு நிலை பெற்ற இயல்பு; அதுமாத்திரம் அன்று. • .

186-137. மரவுரியை உடையாக அணிந்தவர், அழகோடு வலம்புரியை ஒத்த வெண்மையை உடைய நரைமுடியை உடையோர் மாசு இல்லாமல் விளங்கும் திருமேனியை உடையோர், மான் தோலப் போர்த்த தசைகெட்ட மார்பில் எலும்புகள் மேலே தோன்றி அசையும் உடம்பை உடையோர், நல்ல நாட் கள் பலவற்றில் ஒருங்கே உணவை உண்துை விட்ட வர், பகையும் ஹிம்சையும் நீக்கிய மனத்தினர், கற்ற வர் சிறிதும் அறியாத பேரறிவினர், கற்றவர்களுக்கு