பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை 35

கொள்ளும் பொருட்டு ஆகாயத்தே சுழற்சியை உடையவர்களாய், வத்து ஒருங்கே தரிசிக்க, கேடில் லாத கற்பையுடைய மடந்தையாகிய தெய்வயானை யுடன் சில காலம் ஆவினன்குடியிலே இருத்தலும் உரிமையாக உடையவன்; அது மட்டும் அன்று.

17?-189, ஆறு தொழில்களென்று அமைந்த இயல்பினின்றும் பிறழாமல், தாய் தங்தை யென்னும் இருவரைச் சுட்டிய பல் வேறு பழைய கோத்தி ரத்தை உடையவர்களும், காற்பத்தெட்டு ஆகிய கல்ல இளமைப் பருவத்து ஆண்டுகளே கிற்கவேண்டிய கெறி யிலே நின்று கழித்தவர்களும், தர்மத்தையே சொல்லிக் கொண்டிருக்கும் விரதத்தை உடையவர்களும், மூன்று வகையாகச் சொல்லப்பட்ட மூன்று வேள்வித் தியையே செல்வமாக உடைய இருபிறப்பாளர்களும் ஆகிய அந்தணர், முருகனத் துதிக்கும் சமயம் அறிந்து தோத்திரம் கூறவும், ஒன்பது நூலே முறுக்கிய மூன்று புரிகளாகிய துண்ணிய பூணுரலே அணிந்து, உலராத ஈர ஆடையைக் கிடந்தவாறே உலரும்படி உடுத்து, தலைமேலே கையைக் குவித்துக்கொண்டு, முருகனைப் புகழ்ந்து, ஆறெழுத்துக்களேத் தன் பாற்கொண்ட அரிய உடதேச மந்திரத்தை காக்குப்புரளும் மாத்திரத்திலே பலமுறை கூறி, மணம் மிக்க நறுமலர்களே ஏந்தி (வழிபடவும்). அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத் திலே எழுந்தருளியிருப்பதற்கும் உரியவன்; அது மாத்திரம் அன்று. -

190-217. பச்சிலேக் கொடியால் நல்ல மணத்தை யுஓடய சாதிக்காயை நடுவிலே வைத்து, பூசாரியான வன், அதனோடு அழகையுடைய பொருளேப் பொதிந்து வைக்கும் புட்டிலேப்போன்ற தக்கோலக்காயையும்