பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருமுருகாற்றுப்படை

கலந்து, காட்டுமல்லிகையுடன் வெண்கூதாளம் பூவை யும் தொடுத்துக்கட்டிய கண்ணியை அணிந்தவனகி, வாசனை வீசும் சந்தனத்தை அணிந்த, நிறம் எடுத்துக் காட்டும் மார்பையும் கொடுமையான செயலையும் உடையவரும், வலிய வில்லால் கொலைபுரிகின்றவரு மாகிய கானவர், உயர்ந்த புங்கிற்குழாயில் முற்றி விளைந்த தேல்ை ஆகிய கள்ளின் தெளிவை மலையில் உள்ள சிற்றுாரில் வாழும் தம் சுற்றத் தாருடன் உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்னும் சிறிய பறைக்கு ஏற்பக் குரவைக்கூத்து ஆடவிரலால் வலிய மலர்த் துத ேைல மலர்ந்தனவும் வெவ்வேறு வகையாக இருப் பனவும் காம்போடு கூடியனவும் மனம் வீசுகின்றன வும் ஆழமான சுனேகளிலே மலர்ந்தனவும் வண்டுகள் மொய்ப்பனவும் ஆகிய மலர்களால் ஆன கண்ணி, இரட்டையாகக் கட்டிய மலர்மாலேயில் அனைத்துக் கட்டிய கூந்தல், முடித்திருக்கின்ற கஞ்சாவின் இக்ல யோடு கூடிய மனமுடைய பூ இவற்றை அணிந்து, சிவந்த அடிமரத்தை உடைய வெண்கடம்பின் வெள்ளேயான பூங்கொத்துக்களே இடையிலே வைத்து வண்டு வந்து உண்ணும்படியாக (மலர்களையும் சேர்த்துத்) தொடுத்த தும் மிக்க குளிர்ச்சியை உடை யதுமாகிய பெரிய தழையாடையைக் குற்றமறத் திருக்திய வடங்களே உடைய ரகசிய ஸ்தானத்தில் அசையும்படியாக உடுத்து, மயிலேக் கண்டாற்போன்ற தோற்றத்தைப் பெற்ற, மெத் தெ ன கடக்கும் கடையையுடைய மகளிரோடு சிவந்த நிறம் உடை யவன், சிவந்த ஆடையை அணிந்தவன், சிவந்த அடி மாத்தையுடைய அசோகினது குளிர்ந்த தளிர் அசை கின்ற காதை உடையவன், கச்சை அணிந்தவன்,