பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருமுருகாற்றுப்படை

37 4ே9. மாட்சிமைப்பட்ட தலையையுடைய கோழிக்கொடியோடு பிற அலங்காரங்களையும் செய்து பொருத்தமாக அமையும்படி கெய்யோடு கலந்து வெள்ளேக் கடுகை அப்பி, மந்திரங்களே மெல்லச் சொல்லிக் கும்பிட்டுக் கொழுவிய மலர்களேத் தூவி, ஒன்ருேடு ஒன்று மாறுபட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளே ஒருங்கே உடுத்து, சிவந்த நூலேக் கையிலேகட்டிக்கொண்டு,வெண்மையான பொரியைத் தெளித்து, மிக்க வலிமை நிலைபெற்ற பெரிய காலே யுடைய கொழுத்த ஆட்டுக்கிடாயின் ரத்தத்தோடு கலந்த தூய வெள்ளே யரிசியைச் சிறு பலியாக இட்டு, பல கூடை கிறையப் பிரப்பரிசி வைத்து.சிறிய பசு மஞ்சளோடு கறிய வாசனைப்பொருள்களைத் தெளித்து, பெரிய குளிர்ந்த செவ்வலரியினது கறிய குளிர்ந்த மாலையை ஒரே அளவாக அறுத்து அங்கங்கே தொங் கும்படி கட்டி, செறிந்த மலேச்சாரலில் உள்ள நல்ல நகர்களே வாழ்த்தி, நறிய தூபத்தைக் காட்டி, குறிஞ் சிப் பண்ணைப் பாடி, ஒலிக்கின்ற இன்னெலியை உடைய அருவியோடு இனிய வாத்தியங்கள் சேர்ந்து முழங்க, பல நிறங்களேயுடைய மலர்களைத் தூவி, கண்டோர் அஞ்சும்படியாக ரத்தத்தோடு கலந்த சிவந்த தினேயைப் பரப்பி, குறமகளானவள் முருக ஆணுக்கு உவந்த வாத்தியங்களே வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லேயென்ற முரண்பட்ட கொள்கையை உடையவர்களும் அஞ்சும்படியாக, முருகனே வரும்படி செய்த அழகு மிக்க அகன்ற திருக்கோயிலில், வெறி யாடுகின்ற இடத்தில் சிலையோடும்படியாகப் பாடி, பல கொம்புகளை ஒன்ருக ஊதி, ஒலியாற் கொடுமை யையுடைய மணிகளே ஒலித்து, புறங்காட்டி ஓடாத