பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டொழிப்புரை 29,

வலிமையையுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி, தமக்கு விருப்பமானவற்றை வேண்டும் அடியவர் வேண்டியபடியே அடைந்து வழிபட்டுக் கொண்டிருக்க (முருகன்) அங்கங்கே தங்கியிருத்தலும் கான் அறிந்ததே யாகும்: с

350-277. நான் கூறிய அவ்விடங்களானலும் (பிற இடங்களானலும்) தரிசனத்துக்குப் பொருத்த மாக முக்தி நீ கண்ட இடத்தில் முகம் விரும்பித் துதித்து, கை குவித்துப் புகழ்ந்து காலில் விழுந்து கமஸ்காரம் செய்து, "உயர்ந்த பெரிய இமாசலத்தின் உச்சியில் நீல நிறமுடைய தருப்பை வளர்ந்த பசிய சுனேயிலே, ஐம்பூதத் தலைவருள் ஒருவன் தன் கையிலே ஏற்றுக் கொடுக்க, ஆறு முனிவருடைய மனேவியர் பெற்றெடுத்த ஆறு திருவுருவத்தோடு அமர்ந்த செல்வனே! ஆலமரத்தின் அடியிலே வீற்றிருக்கும் தகதிளுமூர்த்தியின் திருமகனே! பெருமையையும் பக்க மலேகளேயும் உடைய இமாசலத்தின் மகளுக்கு மகனே! பகைவர்களுக்கு யமனப் போன்றவனே! வெற்றியையும் வெல்லும் போரையும் உடைய துர்க் கையின் புதல்வனே! ஆபரணங்களே அணிந்த பெருமையையுடைய பழையவளாகிய பராசக்தியின் குழந்தையே! தேவர்கள் வணங்குகின்ற வில்லேக் கையிலே பிடித்த படைத்தலைவனே டோகத்துக்குரிய மாலையை அணிந்த திருமார்பை உடையவனே! எல்லா நூல்களையும் அறியும் பேரறிவுடையவனே! போரில் ஒப்பில்லாத ஒருவகை விளங்குபவனே! பொருகின்ற வெற்றியினையும் இளமையையும் உடை வனே! அந்தணர்களுடைய செல்வமாக இருப்பவனே! மெய்யை உணர்ந்தவர்களுடைய சொற்களெல்லாம்