பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருமுருகாற்றுப்படை

தொக்க தொகுதியாக விளங்குபவனே! தெய்வயானை வள்ளியாகிய மங்கையர்தம் கணவனே! வீரம் மிக்கா ருள் ஆண் சிங்கம் போன்றவனே! வேல் பொருந்திய பெரிய கைகளால் அமைந்த பெரிய செல்வத்தை உடையவனே! கிரவுஞ்ச மலேயை அழித்த, என்றும் குறையாத வெற்றியையுடைய, வானத்தை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி கிலத்துக்கு உரிமை பூண்டவனே! சாதியாலும் சமயத்தாலும் வேறுபட்ட பலரும் புகழும் நல்ல மொழிகளேயுடைய, புலவர் களுக்குள் ஆண்சிங்கம் போன்ற தலைவனே! அருமை யாகப் பெறுதலாகிய முறையையுண்டய பெரிய பொருளாகிய முக்திச் செல்வத்தையுடைய முருகனே! தன்பால் விரும்பி வந்தவர்களுக்கு அவர் விரும்பிய தைத் தந்து நிரம்ப நுகரச் செய்யும் பெரிய புகழை உடையவனே! துணையின்றி வருந்தியவர்களுக்கு அருள் புரியும், பொன் பைரனங்களே அணிந்த சேயே! மேல் நெருங்குகின்ற போர்களே முடித்து உன்னு டைய வென்று அடுகின்ற மார் பினலே பரிசிலர்களே ரகதிக்கின்ற, பயங்கரமான நெடிய வேளே! தேவரும் முனிவருமாகிய பெரியவர்கள் துதிக்கின்ற திரு காமத்தை உடைய தலைவனே! குரனது குலத்தை அழித்த வீரம் பொருந்திய மார்பத்தையும் மிக்க வலிமையையும் உடையவனே! போரிலே சிறந்து கிற்கும் வீரனே! தலைவனே!' என்று பலவகையாக கான் அறிந்த அளவிலே சொல்வனவற்றை விடாமற் சொல்லி;

378-817."உன் பெருமைகளை அளவிட்டு அறிதல் உலகத்தில் உள்ள உயிர்களுக்கு அருமையாக இருத் தலின், நான் கின் திருவடி தரிசனத்தின் பொருட்டு