பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருமுருகாற்றுப்படை

ஈயால் வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக்கின்ற பரந்த தேன் கூடுகள் சிதைய, நல்ல பல வேர்ப்பலாவின் முற்றிய சுளே விழுந்து கலக்க,மேலே உள்ள சுரபுன்னே மரத்தின் வாசனை மிக்க மலர்கள் உதிர, கருங்குரங்கு களோடு கரிய முகத்தையுடைய முசுக்கலைகள் கடுங் கவும் பூவைப்போன்ற புள்ளிகளையுடைய மத்தகத்தைப் பெற்றகரிய பெண்யானைகள் குளிர்ச்சி அடையவும் வீசி, பெரிய களிற்றினது முத்தையுடைய வெள்ளிய தந்தங் களே வாரிக்கொண்டு, குதித்து, நல்ல பொன்னும் மணி யும் தம் நிறம் வெளிப்படத் தோன்றுமாறு செய்து, பொன்னேக் கொழித்து, வாழையின் அடிமரம் முறி யவும், தென்னேயின் பெரிய இளநீர்க் குலைகள் உதிர வும் தாக்கி, மிளகு கொடியின் கறிய காய்க்கொத்தா னது சாயும்படியாக, பொறிகளே மேலே உடையன வும், மெல்ல கடக்கும் நடையை உடையனவுமாகிய மயில்கள் பல ஒருங்கே அஞ்சவும், காட்டுக் கோழியின் வலிமையையுடைய பெடை ஒடிப் போகவும், காட் டுப் பன்றியோடு கரிய புனேயின் உள்ளிட்டில் உள்ள மெல்லிய சிலாம்பைப் போன்ற நிறம் பெற்ற மயிரை புடைய உடம்போடு கூடிய வளைந்த அடியைப் பெற்ற கரடிகள் பெரிய பாறையின் பிளப்பிலே உள்ள குகை யிலே புகுந்து அடங்கவும், கரிய கொம்பையுடைய காட்டுப் பசுவின் நல்ல காளை முழங்கவும் மலையின் உச்சியிலிருந்து இழுமென்ற ஒசையோடு இறங்கி வருகின்ற அருவியையுடைய பழமுதிர்சோலே மலைக்கு உரியவளுகிய முருகன்.