பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள்

குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புள்தலேய இதப் பெரு படையாய்-என்றும் இளேயாய் அழகியாய் ஏறுர்ந்தான் ஏறே

உளயiய்என் உள்ளத்து உறை.

கிரவுஞ்ச மலேயை வேலால் எறிந்து அழித்தவனே, முழங்கும் கடலிலே புகுந்து ஒளித்த சூரபதுமனேச் சங்காரம் செய்தவனே, சிவந்த கலேயையுடைய பூதங் களாகிய போர் புரியும் சேனையை உடையவனே, என்றும் இளமையை உடையவனே, என்றும் அழகாக இருப்ப வனே, இடபத்தை வாகனமாகக் கொண்டு உலாவரும் பரமசிவனுடைய ஆண் சிங்கம் போள்ற குமாரனே, ே என்றும் என் உள்ளத்திலே தங்கியிருப்பவகை வாசம் செய்வாயாக. (1)

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங்கு அமரர்இடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிட நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்லிட வீரன்கை வேல்.

கிரவுஞ்ச மலேயை எறிந்து பொடிபடுத்தியதும், பகை வரது வலிமை குன்றும்படியாகப் போர் செய்ததும், சூானல் துன்புற்ற அக்காலத்தில் தேவலோகத்தில் இருந்த தேவர்களின் துன்பத்தைப் போக்கியதும், இன்று என்னேக் கைவிடாமல் கின்றதும், நக்கீசர் முதலியவர்களே மலக்குகையிலே பாதுகாத்ததும் சத்தியத்தை நீங்காமல் இருக்கும் iாளுகிய முருகனது திருக்கரத்தில் உள்ள வேலே யாகும். - - - (3)