பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருமுருகாற்றுப்படை

வீரவேல் தாரைவேல் விண்ளுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

வீரத்தையுடைய வேல்; நீளமான வேல் தேவர்களே ச் சிறையினின்றும் விடுவித்த வீரம் பொருந்திய வேல்: செவ்வேளின் திருக்கரத்திலுள்ள வேல்; சமுத்திரத்திலே புகுந்து மூழ்கிய வேல்; வெற்றியைத் தரும் வேல்; குரலுடைய மார்பையும் கிரவுஞ்ச மலேயையும் துளைத்த வேல் எனக்குத் துணேயாக உள் ளது. . (3)

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்

கொன்ன வில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம்

பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும்.

கொலேத் தொழிலிலே பயின்ற வேலையுடைய குர&னச் சங்காரம் செய்த தலைவனே. முன்பு பனியால் மூடப் பட்ட உயர்ந்த கிரவுஞ் சகிரியின்மேல் பட்டு ஊடுருவும் படியாகப் பிரயோகம் செய்த ஒப்பற்ற கினது வேலா யுதத்தை, இன்னும் ஒருமுறை என்னுடைய துன்பமாகிய மலே பட்டுருவும்படியாகவும் பிரயோகம் செய்வது பொருத்தமாக இருக்கும். . (4)

உன்னே ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்ன ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக் கோலப்பா வாளுேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தி வாழ் வே.

- பன்னிரண்டு திருக்கைகளோடு கோலங்கொண்ட அப்பனே, தேவர்களுடைய கொடிய பாவங்களைப் போக்கி அருள் செய்யும் வேலாயுதக் கடவுளே, செந்து ரில் எழுங்