பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 85

தருளியிருக்கும் பெருமானே, அடியேன் உன்னேயன்றி வேறு ஒருவரையும் எனக்குத் துணையாக நம்பமாட்டேன்! வேறு ஒருவரையும் வழிபடமாட்டேன். (5)

அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம்தேகன்றும் - வெஞ்சமரில் அஞ்சல் என வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஒதுவார் முன். - முருகா என்று எப்போதும் ஒதுகின்ற அடியார் களுக்கு முன்னலே, அவர்கள்.டால் பயப்படுகின்ற முகம் காணப்படின் முருகனுடைய ஆறுமுகமும் அதனைப் போக்கத் தோன்றும்; கொடிய போரில் பயப்படாதே என்று வேலாயுதம் தோன்றும்; மனத்தில் ஒரு முறை தியானித்தாலும் முருகனுடைய இரண்டு திருவடிகளும் தோன்றும். (6)

முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே-ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கல் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான், முருகன், திருச்செந்தூர் ஆண்டவனே, திருமால் மருகனே, சிவகுமாரனே, துதிக்கையை முகத்திலே உடைய விநாயகருக்கு இள வலே, அடியேன் உன்னுடைய தண் டையை அணிந்த இருவடியையே பற்றுக்கோடாக நம்பி எப்பொழுதும் கும்பிடுவேன். - (?)

காக்கக் கடவிய நீ காளி:ாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமம் அறுமுகவா-பூக்கும் கடம்பா முருகா கதிர்வேல! நல்ல இடங்கன் இரங்காய் இனி. ஷண் முக மலர்ந்த கடம்ப மாலேயை அணிந்தவனே, முருகா, சுடர் விடும் வேலாயுதக் கடவுளே, என்னே க்