பக்கம்:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருமுருகாற்றுப்படை

காப்பாற்றும் கடமையையுடைய நீயே காவாமல் இருந்து விட்டால், என்னேக் காக்கும் பொறுப்பு யாருக்கு உரிய தாகும்; இரங்கி அருளுவதற்கு ஏற்ற பாத்திரமாகிய கல்ல இடம் இது. இனிமேல் கருணைபுரிவாயாக. (8)

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம்

கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு-சுருங்காமல்

ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்

பூசையாக் கொண்டே புகல்.

நெஞ்சே, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்

கும் பன்னிருகைப் பெருமாளாகிய முருகன் திருவடிகளைக் கரங்குவித்துக்கு ம்பிட்டுக் கண் குளிரும்படியாகத் தரிசித்து,குறைவில்லாமல் பெருகிய ஆர்வத்தோடு அழகை யுடைய திருமுருகாற்றுப்படையை, பூசையாக எண்ணிக் கொண்டு பாராயணம் செய்வாயாக. (9)

நக்கீரர் தாம்உரைத்த கன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாள்தோறும் சாற்றில்ை-முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலே தீர்த்தருளித் தான்நினைத்த எல்லாம் தரும். - நக்கீரர் திருவாய்மலர்ந்த நல்ல திருமுருகாற்றுப் படையைத் தன்னைப் பாதுகாக்கும் பொருட்டுத் தினந்தோறும் ஒருவன் பாராயணம் செய்தால், பெரு மையையுடைய முருகக்கடவுள் முன்னலே பாதுகாக்க எழுந்தருளி வந்து உள்ளத்துயரத்தைப் போக்கியருளி, அவன் கருதிய எல்லாவற்றையும் வழங்கியருள்வான். (10)

    • omkm-"amo șomoios,

ಫ್ರಾನ್ಸ್ಕ್