உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 35] 35 (தோட்டம்-மாலை [இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் பாண்டிய னிடம் பூமாலை நெருங்கி) பூமாலை சிந்தனைக்கு இடையூறு ஒன்றும் இல்லையே... பாண்டியன் : இல்லை, இல்லை.... பூமாலை: எதிலே பறிகொடுத்திருக்கிறீர்கள் மனதை ! வானத் தின் அழகிலா - மேகத்தின் அசைவிலா? பாண்டியன்: மோனத்திருக்கும் முதிர் சோலையில், கானத்தால் களிப்பூட்டும் பூமாலை: வானம்பாடியின் வரவை எதிர்ப்பார்த்து ஏக்கமா? பாண்டியன் ! சிரிக்கும் முல்லையும், சிங்காரக் கொல்லையும் உங்கள் சிந்தைக்கு விருந்தளிக்கப் போதவில்லை என்பதை உணர்ந்துதான் வானம்பாடி பறந்து வந்திருக்கிறது! பாண்டியன்; எங்கே ? பூமாலை: தெரியவில்லை. விழியாலும் காணலாம். ஆனால் முதலில் நெஞ்சத்தால்தான் காண முயலவேண்டும். பாண்டியன் : (சந்தேகத்தோடு) பூமாலை ... (சொல்லிக் கொண்டிருக்கும்போது அக்கா என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்புகிறாள். பரந்தாமன் வருகிறான்) பரந்தாமன்: யார் இவன்? பூமாலை: பரந்தாமா, இவர்தான்... ... பரந்தாமன்: சொல்லவேண்டாம் தெரிகிறது. இந்த அயோக் யனை வீட்டுக்குள்ளே யார் அனுமதித்தது? பூமாலை: (கோபமாக) பரந்தாமா... பரந்தாமன்: அதட்டாதே ! நீ செய்ததும் ஒரு நல்ல காரியம் தான் / இவனை நான் பலநாளாகத் தேடிக்கொண்டிருக் கிறேன்.