71 வந்து நிற்கிறார். குமுதா பாண்டியன் பாண்டி யன் என்று அதே வார்த்தையை டைப் செய்து கொண்டிருக்கிறாள்] மேனேஜர் ; ரொம்ப ஒழுங்காயிருக்கு டைப் பண்ற லக்ஷணம் ! (குமுதா திடுக்கிட்டு எழுதல்) மேனேஜர்: பாண்டியன்! பாண்டியன்! போதும் நீ செஞ்ச வேலை. வெளியே போ ! குமுதா : சார் தயவு செய்து....... மேனேஜர்: ஊஹும். போன்னா போ! காட்சி 62] (குமுதா நகருதல்) [ஒரு வீட்டின் பின்புறம் வேலை செய்றது ! எங்க அம்மாமி: நன்னாயிருக்குடியம்மா வீட்டு சாமானையெல்லாம் நொறுக்கிண்டு போய்டுவே போலிருக்க ! ... போ போ ! போ! போதும் போதும் உன் வேலையும் நீயும் அதுக்குத்தான் கர்ப்ப ஸ்திரியை வேலைக்கு சேர்க்க வேண்டாம்னேன். குமுதா: அம்மா ! உங்கள் மகள் மாதிரி நினைச்சு அம்மாமி: மகளாவது மகள் ! இங்கதான் ஒன்பதும் பெண்ணா பொறந்து கிடக்கே! நீவேற்யா? போடின்னா போ! காட்சி 63] (கருடன் பதிப்பகம் புண்யகோடி: எதுக்காக இதெல்லாம் சொல்றேன்னா தொழி லாளர் கோரிக்கை கூடிய சீக்கிரம் நிறைவேறியாகணும். நம்மை நம்பிகிட்டு ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் இருக்காங்க! பரந்தாமன்: கவலைப்படாதீர்! புண்யகோடி : நீங்க அதுக்குத்தான் நீங்க அதுக்குத்தான் திட்டம் தீட்றிங்கன்னு தெரியுது! இருந்தாலும் சில தொழிலாளிங்க கொஞ்சங்
பக்கம்:திரும்பிப்பார்.pdf/79
தோற்றம்