உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஷா 87 வேண்டாம் இன்னைக்கு ஒருநாள் தானே. நாளையிலே மருந்துகூட போடவேண்டியதில்லை. நாளைக்கு ருந்து போறேன். பூமாலை : சரி... சொன்னால் கேட்க மாட்டே. ம்... போயீ படு. உஷா: நிம்மதியா தூங்குங்க...ம். (போகிறாள் -பரந்தாமன் வருகை) பரந்தாமன்: அக்கா எப்படி இருக்கிறது? பூமாலை: எல்லாம் சௌக்யமாய் இருக்கிறது. உஷா: (வந்து) கூப்பிட்டிங்களா ? பூமாலை: உனக்கு ஒன்றுமில்லையம்மா ! நீ போய் படு. பரந்தாமன்: நான் வர்றேன் அக்கா ! நீ நல்லாத் தூங்கு. (பரந்தாமன் நிம்மதியில்லாமல் உலாவுகிறான். பிறகு மெதுவாக வந்து கட்டிலருகே சென்று-உஷா என உச்சரிக்கிறான். பிறகு மெதுவாக தொடு கிறான் - பூமாலை குதித்தெழுகிறாள்) பூமாலை: தெரியுமே எனக்கு உன் சேதி. பரந்தாமன்: அக்கா ! பூமாலை: தோட்டத்தை அழிக்கப் புறப்பட்ட குரங்குகூட சில மலர்களை பாக்கி வைத்துவிடும்... செந்தாமரை குளத்தில் புரளும் எருமைகூட சில புஷ்பங்களைத் துவைத்து நாசப் படுத்தாமல் வீட்டுவிடும். குரங்கு மனமும் எருமைப் பண்பும் ஒருங்கே அமையப் பெற்றவனே, உன் கண்ணுக்கு இறையாகாமல் தப்ப எந்தப் பெண்ணுக்கும் உரிமை கிடையாதா? உன் வெறிபிடித்த தர்பாரிலே கற்புநெறி காத்துக்கொள்ளும் கன்னியர்களே வாழக்கூடாதா? எட் டாத பழத்தை புளிக்குமென்று சொல்லிவிட்டுப் போகிற குள்ள நரியின் புத்திகூடவா உனக்குக் கிடையாது? முயச்சி திருவினையாக்கும் என்ற முதுமொழியை இந்த மோச காரியங்களுக்குத்தான நீ பயன்படுத்த வேண்டும்.