உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அவைகளையெல்லாம் திரும்பிப்பார். ஏன் நிற்கிறாய் பயங்கர மிருகமே, ஏன் நிற்கிறாய்? பரந்தாமன் : அக்கா !...... பரந்தாமா ! நீ மனிதனல்ல, மிருகம். மிருகம். காட்சி 81] போதாது. (ஓடுகிறான்) [பாழடைந்த மண்டபம் பரந்தாமன்: பரந்தாமா! பாவி! பாவி ! உனக்கு இந்த தண்டனை இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும். (வானத்திலே பல நட்சத்திரங்கள் திடீரென உதிர்ந்து பெண்ணாக மாறுகின்றன. பரந்தாமன் Reaction-Echo) Echo : வானத்திலே பல நட்சத்திரங்கள் - ஒரே நிலவு-வைய கத்திலே உனக்குப் பல சகோதரிகள்-ஒரே மனைவி - ஒரே மனை வி ...... பரந்தாமன்: அக்கா ! அன்பின் சிகரமே ! என்னை மன்னித்து விடுங்கள். நான் பகுத்தறிவாளனாகி விட்டேன். பகுத்தறிவாளனாகி விட்டேன். திரும்பிப்பார்-எனக்கு மட்டுமல்ல- உலகத்திற்கே என் அக்காள் வழங்கிய ஒப்பற்ற உபதேசம். திரும்பிப்பார் - ஏ மாஜி மனிதனே - மகா பாதகனே- நீயும் திரும்பிப்பார். நீ உருண்டு வந்த சாலை யிலே அள்ளித் தெளித்திருக்கும் மண்டையோடுங்கள் எத்தனை? பிழிந்தெறியப்பட்ட இருதயச் சக்கைகளின் தொகை எவ்வளவு? எண்ணிப்பார். இழிவு நிறைந்தவனே திரும்பிப்பார். ஏ, மானிட ஜாதியே நீ குரங்கிலிருந்து வளர்ந்தாயாம் -அந்தக் குரங்கு மனப்பான்மை உன்னை விட்டு குறைந்து விட்டதா என்று ஒருமுறை திரும்பிப்பார்- திரும்பிப் பார்-திரும்பிப் பார்—அக்கா ! நான் திரும்பிப் பார்த்துவிட்டேன் அக்கா! திருந்திவிட்டேன் அக்கா ! (ஓடுகிறான்)