பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 ❖

திரும்பி வந்த மான் குட்டி



குஞ்சுகளும், பாவம், கீழே விழுந்து நசுங்கிப் போயின. தாய்ப் பறவை மட்டும் தப்பிவிட்டது.

தப்பிப் பிழைத்த தாய்ப் பறவை குளக்கரையிலிருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து அழுது கொண்டேயிருந்தது. அப்போது காட்டிலிருந்து வந்த காக்கை, தூரத்தில் வரும்போதே மரத்தைக் காணாமல் திடுக்கிட்டது. அருகிலே வந்ததும், மரம் சாய்ந்து கிடப்பதையும், கல்லின் மீது அந்த மரத்தில் வசித்த காக்கை அமர்ந்து அழுது கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தது. உடனே கல்லின் மீது இருந்த காக்கையின் அருகிலே சென்று விசாரித்தது. விவரம் தெரிந்ததும் மிகவும் வருந்தியது. அதற்கு ஆறுதல் கூறித் தேற்றியது.

“காட்டிலேயும் புயல் வீசியிருக்குமே! நீ இருந்த மரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லையே!” என்று கேட்டது, அழுகையை நிறுத்திய காகம்.

“நான் இருந்த காட்டிலேயும் புயல் பலமாகத்தான் விசிற்று. ஆனால், பக்கத்திலே பக்கத்திலே மரங்க ளும், செடி கொடிகளும் இருந்ததால், புயலின் வேகத்தை அவைகள் தடுத்துவிட்டன. ஒரு மரம் கூட விழல்லை. இங்கே நீ இருந்த மரம் தனி மரமா இருந்ததாலே புயல் அதை சுலபமாய்ச் சாய்ச் சிடுச்சு.”