பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 ❖

திரும்பி வந்த மான் குட்டி



பழங்களும் ஏராளமாகத் தொங்கின. அத்துடன், அந்த மரத்திலே ஏழெட்டுக் குரங்குகள், குட்டிகளோடு இருந்தன. உடனே ரங்கனுக்குக் குஷி பிறந்து விட்டது.

ஒரே தாவாகத் தாவி, அந்த மரத்திலே ஏறியது. சட்டையும், குல்லாயுமாக வந்த ரங்கனைக் கண்டதும், அதை யாரோ என்று நினைத்துவிட்டன அந்தக் குரங்குகள்!‘உர். உர். உர்” என்று கத்தி, அதை அடித்து விரட்டி விட்டன.

‘நானும் குரங்கு. அதுகளும் குரங்குகள். என்னைப் பார்த்ததும் ஏன் இப்படிக் கத்தனும்? ஓட ஒட விரட்டனும்?. ஓ! புரியுது, புரியுது. என் உடையைப் பார்த்துத்தான் விரட்டியிருக்கணும் என்று நினைத்தது. உடனே குல்லா, மேல் சட்டை, கால் சட்டையெல்லாவற்றையும் கழற்றி அங்கேயிருந்த ஒரு கால்வாயிலே தூக்கி எறிந்தது.“இந்த உடுப்பும் வேண்டாம். நம்ம குரங்கு இனமும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு ஊருக்குள்ளே ஓடியது.

வழியிலே ஒரு கடைவீதி இருந்தது. அங்கே ஒரு பொரிகடலைக்கடை இருந்தது. கடையிலே யாருமே இல்லை. போன வேகத்திலே, அந்தக் கடைக் குள்ளே புகுந்தது. அங்கே கோபுரம் போல், கொட்டி வைத்திருந்த பொரியை இரண்டு கைகளாலும்