பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


உயிர்கள் படும் துன்பத்தைத் துடைக்கவல்ல பேராற்றலை மக்களுக்கு வழங்குவதாகும்.

“எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே”

(தாயு. பரா-கண்ணி 5)

எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணும் தபோதனர்கள்
செவ்வறிவை நாடிமிகச் சிந்தை வைப்ப தெந்நாளோ

(௸. எந். கண்ணி 12)

எனத் தாயுமானப் பெருந்தகையார் எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணி அவ்வுயிர்கள் படும் துயர்த்துக்கு உளம் இரங்கி அவற்றின் துன்பங்களைத் துடைக்க முற்படும் கருணைத்திறமாகிய உயிர் இரக்கவுணர்வினை இறைவனது திருவருளால் பெறுதல் வேண்டு மென்பதனை நன்கு வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய உயிர் இரக்க வுணர்வு இறைவனது திருவருள் ஒன்றினாலேயே பெறுதற்குரியது என்பதனை மகாதேவ மாலையில் 'கருணை நிறைந்து அகம்புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கெல்லாம் களைகனாகித் தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்னுடை யோய்' என இறைவனைப் போற்றுமுகத்தால் வள்ளலார் அறிவுறுத்தி யுள்ளமை காணலாம்.

உயிர்க்குயிராகிய கடவுளின் இயற்கை விளக்கமே அருள் எனப்படும். 'அருள் என்பது தொடர்பு பற்றாது (உறவு முறை கருதாது) இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை' என விளக்கம் தருவர்