பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுளின் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது. அருள் என்பது கடவுள் தயவு கடவுள் இயற்கை விளக்கம். சீவகாருண்யம் என்பது சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்.

இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அநுபவம் ஆதலின் சீவகாருண்யத்தைக் கொண்டு இறைவனது அருளைப் பெறுதல் கூடும். வேறொன்றினாலும் பெறுதல் இயலாது.

கடவுள் அருளைப் பெறுதற்கு உயிரிரக்கமாகிய சீவகாருண்யமே வழி. உயிரிரக்கமாகிய சீவகாருண்யம் மக்கள் உள்ளத்தே விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். அதனால் பிறவுயிர்க்கு உதவி செய்யத் தோன்றும். அந்த ஆற்றலால் எல்லா நன்மைகளும் தோன்றும். மக்கள் உள்ளத்தில் உயிரிரக்கம் மறையும் போது அறிவும் அன்பும் உடனே மறைந்துவிடும். அவனால் பிற உயிர்க்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆற்றல் மறையும். அது மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும். ஆதலின் புண்ணியம் என்பது சீவகாருண்யமே என்றும் பாவமென்பது சீவகாருண்யம் இல்லாமையே என்றும் அறிதல்வேண்டும்.

சீவகாருண்ய ஒழுக்கத்தினால் மக்கள் உள்ளத்துள் தோன்றும் இரக்கத்தின் விளக்கமே கடவுள் விளக்கம். அவ்வொழுக்கத்தனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பல்கால் கண்டு நுகர்ந்து நிறைவு பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவர். அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள். உயிர்களுக்கு, உயிர்களின் தொடர்பாக