பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


உலகிற் பலர் பசி தாகம் பயம் முதலியவற்றால் மிகவும் துன்புறக் காண்கின்றோம். இவர்கள் முன்னைப் பிறப்பில் சீவகாருண்ய ஒழுக்கத்தை விரும்பாமல் வன்னெஞ்சத்தவராய்த் தீது நெறியில் நடந்தவராகையால் கடவுளின் ஆணைப்படி பசி தாகம் பயம் முதலியவற்றால் துன்பப்படுகிறார்கள் என்றறிய வேண்டும்.

சீவகாருண்ய ஒழுக்கம் சிறிதுமில்லாத புலி சிங்கம் முதலிய விலங்குகள் திரியும் காட்டிலே இவ்வுலகியல் ஒழுக்கம் நிலைபெறாது. அதுபோல் சீவகாருண்ய மில்லாத மனிதர்கள் வாழுமிடத்திலும் இவ்வுலகியல் ஒழுகலாறு செவ்வையாக நடைபெறாது. சீவகாருண்யம் இல்லாத போது மக்கள் உள்ளத்தே அருள் விளக்கம் தோன்றாது; அது தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது; அது கைகூடாத போது வீடுபேற்றின் பத்தினை ஒருவரும் அடைய மாட்டார்கள். ஆகவே பரலோகஒழுக்கமும் சீவகாருண்யத்தாலேயே கைகூடு மென்று அறிதல் வேண்டும், சீவகாருண்யம் ஆன்மாக்களின் இயற்கை விளக்கமாதலால் அந்த இயற்கைவிளக்கம் இல்லாத உயிர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது. உயிர்களெல்லாம் இயற்கைவிளக்கமாகிய கடவுளது அருள் அறிவுக்கறிவாய் விளங்குவதற்கு ஒத்த உரிமையுடைய இடங்களாக அமைந்துள்ளன. அவ்வுயிர்கள் உடம்புடன் கூடி அன்புடையராய் வாழ்தற்குப் பூதகாரியமான உடம்புகளே உரிமையாக உள்ளன. அவ்வுடம்புகளில் ஆன்மாக்கள் நிலைபெறாவிடில் ஆன்மவிளக்கமாகிய இரக்கம் மறைபடும்; அதனால் கடவுளின் அருள் விளக்கம் வெளிப்படாது; அப்போது அறியாமையே மிக்குத் தோன்றும்; அதுவே ஆன்மாக்களின் அறிவு, இச்சை, தொழில்களைக் கட்டுப்படுத்தும் பிணிப்பு ஆகி