பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240


செய்யும் சிவயோக நிலையே இறைவன் அடியார்கட்குத் தோன்றும் துணையாய் எழுந்தருளி அருள் வழங்கும் வாய்ப்பினையுடையதாகும். இந்நுட்பம்

துங்கிருள் நடு நல்யாமத் தோர் மழலை யாழ் சிலம்ப
வந்தகம் புகுந் தேமன் வருவிடம் திருவிடை மருதே

(திருவிசைப்பா-179)

என வரும் கருவூர்த் தேவர் அருளனுபவத்தால் இனிது புலனாதல் காணலாம்.

இங்ஙனம் யோகிகள் தனித்திருக்கும் நள்ளிரவில் அவர்கட்குக் கட்புலனாகத் தோன்றி யருள்புரிதலும் அவர்கள் மக்கள் பலரொடும் சூழ் இருக்கும் நிலையிலே தோன்றாத் துணையாயிருந்து அருள்புரிதலும் இறைவனது இயல்பாகும். இவ்வியல்பினை,

"நான் தனிக்கும் தருணத்தே
     தோன்றுகின்ற துணையாய்
நான் தனியா விடத்தெனக்குத்
     தோன்றாத துணையாய்"

(3114)

என வரும் பாடலில் அருட்பிரகாச வள்ளலார் தம் அநுபவநிலையில் வைத்துப் புலப்படுத்தியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும்.

இறைவனருளால் சித்தித் திறம் பெற்ற அருட்பிரகாச வள்ளலார் தாம் ஒருவர் மட்டும் முத்தி நிலையாகிய பேரின்ப வாழ்வில் திளைத்தலைக் காட்டிலும் மன்னுயிர்களின் துன்பத்தைத் தம் சித்தித் திறத்தால் போக்கிப் பல்லுயிர்க்கும் நலம்புரிதலே இன்பம்பெருகுந்