பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242


தொறும் கண்டு பாடி நின்றாடி உலகத்துயிர்க்கெலாம் இன்பம் விளைத்தல் வேண்டுமெனவும், பிறருடைய துன்பங்களைப் போக்கி இறைவன் திருவடிக்கு அன்புடையவராகச் செய்தல் வேண்டுமெனவும், புலை, கொலை இரண்டும் நீக்கிய நெறியில் உலகெலாம் நடக்கத் தாமுயலுதல் வேண்டுமெனவும், மன்னுயிர்களின் வருத்தத்தினைத் தீர்க்கும் நல்லவரத்தினைத் தமக்குத் தந்தருள வேண்டுமெனவும், தீமை இல்லாத இவ் விருப்பத்தை இறைவனாகிய நீயே அறிவிக்க அறிந்து இத்தகைய விண்ணப்பத்தை நின்பால் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அம்மையப்பனாகிய இறைவனை நோக்கிப்பாடிய பிள்ளைச் சிறு விண்ணப்பப் பாடல்கள் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" எனத் திருமூலர் அருளிய வண்ணம் வள்ளலாரது அருள் வேட்கையினை நன்கு புலப்படுத்துவன ஆகும்.

சிவனருளால் தாம் சித்தி பெற்ற திறத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்தன,

"திருப்பொதுவில் திருதடம் நான்
சென்று கண்ட தருணம்
சித்தி என்னும் பெண்ணரசி
எத்தி என் கைப்பிடித்தாள்"

(3381)

"உலகிற் பெருந்திறற் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்குத் தந்தனம் எனஎன்
சென்னி தொட்டுரைத்தனை"

(3847)

சாகாவரங் கொடுத் தென்றுந் தடைபடாச்
சித்திகள் எல்லாம் அளித்தனை எனக்கு

(3848)