பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288


மேலான பரம் பொருளின் உள்ளும் புறமுமாகி இனிமையே விளங்க ஒருவாற்றாலும் வெளிப்படுத்த வொண்ணாத இயல்புடையதாக இருந்ததே அருளனுபவமாகுமென்று அடியேனுக்கு அறிவுறுத்தருளினாய் ஞான சம்பந்தன் என்னும் குருமணியே! எனப் போற்றுமுகமாக அருளனுபவத்தின் இயல்பினை விரித்துரைப்பது,

தனிப்பரநாத வெளியின் மேல்நினது
     தன்மயம் தன்மயமாக்கி
பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப்
     பரம் பரத்துட்புறமாகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய்
     இருந்ததே அருளனுபவம் என்
றனக்கருள் புரிந்தாய் ஞான சம்பந்தன்
     என்னும் என் சற்குரு மணியே

(3229)

எனவரும் திருவருட்பாவாகும்.

என்றும் அழிவின்றி உள்ளதாய் விளங்கும் ஞானப் பெருவெளியின் மேலே என்றும் உள்ள பொருளாய் உலகுயிர்கள் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளதுவாய், எப்பொருட்கும் நடுவாய் ஆன்மாவாகிய எனக்கு உரிமை யுடையதாய் நானேயாய்க் கலந்திருப்பதாய், என்னைத் தனக்கு அடிமையாகவுடையதாய், உயிர் உணர்வினால் சுட்டிக் கூறுதற்கரிய சித்தாகிய சத்துப் பொருளாய் இன்ன தன்மையதென்று வெளியிட்டுச் சொல்லவொண்ணாத நிலையில் அப்பாலுக்கப்பாலதாய்த் தூய வெட்ட வெளியில் விளங்கும் சிவ பரம் பொருளோடு இரண்டறக் கலந்து இன்புறுவதே சிவஅநுபவம் ஆகுமென்று யான் உள்ளங் கொள்ள அவ்வநுபவத்தைத் தந்தருளிய உயர்வற உயர்ந்த குருவே என்று ஞானசம்பந்தப்