பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296


அலர்ந்தலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்", "கடக்களிறு ஏற்றாத் தடப் பெருமதத்தின் ஆற்றேனாக அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன்", "வாக்கிறந்தமுத மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்", "அற்புதமான அமுததாரைகள் எற்புத்துளை தொறும் ஏற்றினன்", "அள்ளூறாக்கை யமைத்தனன்" என்னும் தொடர்களால் இன்புருவமும் மணிவாசகப் பெருமான் பெற்றமையும் "கன்னல் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்பதாக்கினன்" என்ற தொடரால், வாதவூரடிகள் 'மரணமிலாப் பெரு வாழ்வு' பெற்றதிறமும் திருவண்டப்பகுதியாகிய இவ்வகவலில் தெளிய உணர்த்தப் பெற்றன என்பது இராமலிங்க வள்ளலார் துணிபாகும். இறைவன் திருவருளால் திருவண்டப்பகுதியின் தெளிந்த சாரமாகத் தாம் தெளிந்து உணர்ந்து கொண்ட இவ்வுண்மையினை,

உரு அண்டப் பெருமறை என்றுலகமெலாம் புகழ்கின்ற
திரு அண்டப் பகுதி எனும் திரு அகவல் வாய் மலர்ந்த
குரு என்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவே நீ
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கியம் புதியே.

(திருவருட்பா-2309)

மன்புருவ நடு முதலாமனம் புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற் றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னும்
இன்புருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே.

(திருவருட்பா - 3259)

எனவரும் திருப்பாடல்களில் திருவாதவூரடிகளாகிய குருவைத் தாம் வினவி உணர்ந்து கொண்ட நிலையில் அப்பெருமானை நோக்கி அன்புருவம், அருளுருவம்,