பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307


களைக் குறித்துச் சைவ வினாவிடை, நித்திய கன்மவிதி முதலிய சிறு நூல்களை இயற்றினார். இவ்வாறு ஆறுமுக நாவலர் தமிழுக்கும் சைவத்துக்கும் செய்த பணிகள் பலவாகும். அப்பணிகளுள் பிழையற்ற பதிப்பு முறையும், உரைநடையமைப்பும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும்.

சென்ற நூற்றாண்டில் தோன்றிய இராமலிங்க வள்ளலார் தம் தாய்மொழியாகிய தமிழின் இனிமையையும், மனத்தால் அறிதற்கரிய நுண்பொருள்களையும், சொற்களிற் புலப்பட வைக்கும் எளிமைத் திறத்தினையும் உலகுயிர்களை இயக்கும் பரம்பொருளைப் போற்றிப் பரவுதற்கினிய தெய்வத்திறத்தினையும் நன்குணர்ந்த செம்புலச்செல்வராவர். கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்கும் பயன்படும் வண்ணம் தாம் பெற்ற திருவருட் புலமையால் பாட்டும், உரையும் என இருதிறத்தாலும் செந்திறத்த தமிழோசையமைய அமிழ்தினுமினிய தமிழ்மொழியை வளர்த்த அருளாசிரியர் இராமலிங்க வள்ளலாரேயாவர். வள்ளலார் பாடியருளிய பாடல்கள் ஆறாயிரத்துக்கு மேற்பட்டன. பொதுவாகத் திருக்குறள் முதலிய தொன்னூல்களையும், சைவத்திருமுறைகளையும், சிறப்பாகத் திருவாசகத்தையும், சிந்தித்துணரும் நிலையில் அருட்பிரகாச வள்ளலார் பாடிய செழும் பாடல்கள் அனைத்தும் திருவாதவூரடிகள் அருளிய திருவாசகத்தைப் போலவே படிப்போர், பக்கத்திலிருந்து கேட்போர், சிந்திப்போர், ஆகிய எல்லோருடைய உள்ளங்களையும் உருகச்செய்வனவாகும். இக்காலத்தில் கற்றோரேயன்றி மற்றோரும் எளிதிற் புரிந்து படித்துணர்ந்து மகிழ்தற்குரிய வண்ணம் சொல்லின் எளிமையும் பொருளின் தெளிவும் உடையனவாகத் திருவருட்பாப் பாடல்கள் அமைந்திருப்