பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310


திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள வடிவுடை மாணிக்கமாகிய அன்னையைப் பரவிப்போற்றும் பனுவலில் "மெய்யன்பர் புனைந்த தமிழ்ப் பாவால் நிறைந்த பொற் பாவாய்" (1389) என அம்மையை வள்ளலார் தமிழ்ப் பாவின் திருவுருவமாகப் பரவிப்போற்றியுள்ளமை காணலாம். வடிவுடை அம்மையைப் போற்றுவதாக அமைந்த இத்தொடர்,

"தொடுக்கும் கடவுட் பழம் பாடற் றொடையின் பயனே
நறைபழுத்த துறைத்தீந்தமிழின் ஒழுகுநறுஞ்சுவையே"

எனக் குமரகுருபர அடிகளார், மீனாட்சி அம்மையை அழைத்துப் போற்றிய பிள்ளைத் தமிழின் தொடரை அடியொற்றி அமைந்துள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். செந்தமிழ்க் கடவுளாகிய முருகனை,

முன் செய்த மாதவத்தால் அருணகிரிநாதர்
முன்னேமுறையிட்டு ஏத்தும்
புன்செயல்தீர் திருப்புகழை
ஏற்றருளும் மெய்ஞ்ஞானபுனிதன்

(2515)

எனவும், அம்முதல்வனது திருவடிப் பேரழகில் ஈடுபட்டு அத்திருவடிகளைக் கனவிலேனும் கண்டு மகிழ்தல் வேண்டும் என்னும் பெருவேட்கை தோன்றப்

பண்ணேறு மொழியடியார் பரவியேத்தும்
பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவிலேனும்
காட்டென்றால் காட்டு கிலாய் கருணைஈதோ!

(103)

எனவும் வள்ளலார் குறித்துப் போற்றியுள்ளமை தெய்வத்திறம் பேசுவதற்கு ஏற்புடைய மொழி தமிழ்