பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314


வழியாக வெளி வந்த செந்தமிழ்ப் பாடல்கள் யாவும் சொல்லாலும், பொருளாலும், கற்போர்க்கும், கேட்போர்க்கும், அறிவொளி பரப்பும் தன்மையனவாகவே அமைந்துள்ளன. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதுபோன்று வள்ளலார் உள்ளத்தில் தோன்றிவரும் கவிப் பெருக்கும், கலைப்பெருக்கும் இந்நாட்டிற் பசியாலும் பிணியாலும் வாட்டமுற்று அறிவுக் கண்ணை இழந்து பள்ளத்தில் விழுந்த குருடர்கள் எல்லாம் கல்விக் கண்பெற்று உலகியல் வாழ்விலும், அருளியல் வாழ்விலும் உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்கு உரியவண்ணம் செய்தன. வறுமையிலும் பசிக்கொடுமையிலும் சிக்குண்டு துன்பக்குழியில் வீழ்ந்து துயருறும் ஏழை எளிய மக்களை யெல்லாம் இறைவனது திருவருளாகிய ஒளியின் உதவி கொண்டு மேல்நிலை பெற வழிவகுத்த பெருமை வள்ளலார் பாடிய தெளிந்த தமிழ்ப் பாடல்களின் சிறப்பியல்பு ஆகும். இங்ஙனம் மக்களது கலங்கிய அறிவினைத் தெளிவிக்கும் திருவருட்யாவாகிய தமிழ்அமுதத்தைப் பருகிச் சுவை காணும் பண்புடைய பெருமக்கள் இவ்வுலகில் வாழும் நிலையிலேயே வானோர் அமிழ்தத்தினைப் பருகி மகிழுஞ் சிறப்பினைத் தம் வாழ்விற் கண்டுணர்ந் தோராவர்.

திருவருட்பாவினை நன்கு பயின்று இதன் சுவை நலத்தில் திளைத்து இன்புற்ற தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் வள்ளலார் பாடிய திருவருட்பாவின் இயல்பினை மனத்துட்கொண்டு செந்தமிழ்க் கவிதையின் மாட்சியினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது.

உள்ளத்தில் உண்மைஒளி புண்டாயின்,
     வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்,
     கவிப்பெருக்கும் மேவுமாயின்