பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

315


பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
     விழிபெற்றுப் பதவி கொள்வர்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
     இங்கமரர் சிறப்புக் கண்டார்

(பாரதியார் 22. தமிழ் 4)

எனவரும் பாடலாகும்.

"பாட்டுக்கொரு புலவன் பாரதி" யென அறிஞர்களாற் போற்றப் பெற்ற தேசியகவி சுப்பிரமணிய பாரதியார், வள்ளலார் பாடிய திருவருட்டாவில் பெரிதும் ஈடுபாடுடையவர் என்பது, திருவருட்பாவில் காணப்படும் சிந்து, கண்ணி, கீர்த்தனம் முதலிய யாப்பு வகைகளை அடி ஒற்றி பலபாடல்கள் பாடி இருத்தலாலும் வள்ளலார் அறிவுறுத்திய மரணமிலாப் பெரு வாழ்வினை உளங்கொண்டு "சாகாவரம் அருள்வாய்" எனப் பாடிய இசைப்பாடலினாலும், சமயப்பொதுமையினை அறிவுறுத்தும் முறையில் பாடிய பிற தோத்திரப் பாடல்களினாலும் இனிது புலனாகும்.

இராமலிங்க வள்ளலார் பாடிய,

களக்கமறப் பொதுநடம்நான் கண்டு கொண்ட தருணம்
     கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ
     வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப்படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்கு கவர்ந்திடுமோ
     குரங்கு கவராதெனது குறிப்பிலகப் படினும்