பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316


துளக்கம்அற உண்ணுவெனோ தொண்டை விக்கிக் கொளுமோ
     சோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே.

(3380)

எனவரும் திருவருட்பாவை உளங்கொண்டு,

களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
     கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெதும்பி உதிர்ந்திடுமோ
     வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப் படுமோ
வளர்த்த பழம் கர்சன் என்ற குரங்கு கவர்ந்திடுமோ
     மற்றிங்கன் ஆட்சிசெயயும் அணில்கடித்து விடுமோ
துளக்கமற யான்பெற்றிங் குண்குவனோ, அல்லால்
     தொண்டை விக்குமோ ஏதும் சொல்லரியதாமே.

(பாரதி-கோகலே-33)

எனக் கோகலே சாமியாரைப் பற்றிப் பாரதியார் பாடியுள்ள பாடல், திருவருட்பாவில் பாரதியாருக்குள்ள ஈடுபாட்டை நன்கு புலப்படுத்துவதாகும். மேற்குறித்த கோகலே சாமியார் பாடல் தலைப்பின்கீழ் 'இராமலிங்க சுவாமிகள் "களக்கமறப் பொது நடம் நான் கண்டு கொண்ட தருணம்" என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது' எனப் பாரதியாரவர்களே குறிப்பிட்டு இருப்பது இவ்வுண்மையினை வற்புறுத்துவதாகும்.

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனைத் தம் உள்ளத்தே இடைவிடாது நினைத்துப் போற்றுவோர் நோயற்ற பொன்மயமான செம்மேனியுடையவராய், நரை, திரை, மூப்பு இன்றி மரணமிலாப் பெருவாழ்வினராய் நிலைத்த தூய உடம்பினைப் (சுத்ததேகம்) பெறுவார்கள் என்பதனை வள்ளலார் தாம் பாடிய திருவருட்பாப்