பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318


களின் துயர் துடைத்தல் வேண்டும் என இறைவனைப் போற்றும் முறையில் வள்ளலார் பாடிய பாடல்கள் உயிரிரக்க உணர்வின் இலக்கியமாக அமைந்துள்ளமை திருவருட்பாவின் தனிச் சிறப்பாகும். இவ்வுண்மை,

கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கடுத்த
     கடுந்துயர் அச்சமாதிகளைத்
தருண நின்னருளால் தவிர்த்தவர்க்கின்பம்
     தரவும் வன்புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
     உஞற்றவும் அம்பலந்தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை
     வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்

(7430)

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
     வருத்தத்தை ஒரு சிறிதெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக்கேட்டும்
     கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் பலத்தால்
     இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணுமவ் வருத்தம் தவிர்க்கும் நல்வரந்தான்
     நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

(3408)

பல்லிகள் பலவாயிடத்தும் உச்சியினும்
     பகரும் நேர் முதற்பலவயினும்
சொல்லியதோறும் பிறர்துயர் கேட்கச்
     சொல்கின்றவோ எனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை
     வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
வல்லியக் குரல்கேட் டயர் பசுப்போல
     வருந்தினன் எந்தைநீ அறிவாய்

(3432)