பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358


மாலையிட்டுமகிழும் நிலையினைக் கண்டு ஆறுதல் உடையவர்களாய், என்னைக் கண்டு பெருமித நிலையில் உள்ளார்கள். என்னை முன்னர் அயன்மையாகக் கருதிய மகளிரெல்லாம் இப்போது எனது உறவினை விரும்பி என் அருகில் அமர்ந்து என்னைப் பரவிப்போற்று கின்றார்கள் எனத் தலைவி தான் பெற்ற இன்பநிலையினைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்தது,

வஞ்சமிலாத் துணைவருக்கே மாலைமகிழ்ந் தளித்தேன்
     மறைகளுடன் ஆகமங்கள் வகுத்து வகுத்துரைக்கும்
எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
     எற்றோ நான்புரிந்ததவம் சற்றே நீ உரையாய்
அஞ்சுமுகம் காட்டியஎன் தாயரெலாம் எனக்கே
     ஆறுமுகம் காட்டிமிக வீறு படைக்கின் றார்
பஞ்சடிப் பாவைய ரெலாம் விஞ்சடிப் பாலிருந்தே
     பரவுகின்றார் தோழி என்றன் உறவுமிக விழைந்தே!

(5718)

எனவரும் திருவருட்பாவாகும். இதன்கண் 'அஞ்சுமுகம் காட்டியஎன் தாயரெலாம் எனக்கே ஆறுமுகம் காட்டி மிக வீறுபடைக்கின்றார்' எனவரும் தொடரில் 'அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' எனவரும் நக்கீரர் பாடற்றொடர் இடம் பெற்றிருத்தல் அறிந்து இன்புறத்தகுவதாகும்.

கண்ணுக்கினியராய் என்னுடைய அன்பினாற் கலந்த தலைவராகிய இறைவர் என்னை யணைந்தபொழுது என்னையும் என்கருவி கரணங்களையும் கண்டறியாத வளாயினேன். காணுங் கரணங்களெல்லாம் பேரின்ப மெனப் பேணும் சிவபோக நுகர்வில், எண்ணத்தக்க உலக போகங்களெல்லாம் இச் சிவபோகத்தை நோக்க மிகமிகச் சிறியனவாம் என மறைகள் கூறும் அளவின் தன்மை