பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

361


வார்கள். "தோழியே! ஆனந்தத்தைத் தரும் கள்ளினை யான் பொன்னம்பலத்தின் நடுவிலே கண்டதுண்டு, சிற்றம்பலத்தையடைந்து அக்கள்ளினை யுண்டதுமுண்டு. என்னால் உண்ணப் பெற்ற அக்கள்ளானது உலகத் தவரால் இகழப்படுகின்ற பல பொருள்களிலிருந்தும் இறக்கிய இழிந்த கள் அன்று; எக்காலத்தும் இறவாத நிலையில் மக்களை நிலைபெறச் செய்யும் கள் ஆகும். உலகத்தார் உண்டபொழுது அவர்களை மயக்கும் படியான கள் அதுவன்று; உள்ளத்தில் மயக்கம் அத்தனையும் அறவே யொழித்துத் தெளிவாகிய ஞானத்தினைத் தரும் கள் யானுண்ட கள் ஆகும். என்னால் உண்ணப்பட்ட கள்ளானது உலகியல் வாழ்வில். துன்புற்றார் பிறரும் என்னை அடுத்தடுத்துக் கண்டால் அவர்களுக்கு அறிவினை வழங்கும் இயல்பினையுடையதாகும்" என இறைவன்பால் காதல் மீதுார்ந்து அவனையணைந்து இன்புற்ற தலைவி தான் பெற்ற பேரின்ப மகிழ்ச்சியினைத் தன் தோழிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது,

கள்ளுண்டாள் எனப்புகன் றார் கனகசபைநடுவே
     கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான்
எள்ளுண்ட பலவிடயத் திறக்குங்கள் அன்றே
     என்றும் இறவா நிலையில் இருத்துங்கள் உலகர்
உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
     உள்ள மயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்துக் கண்டால்
     அறிவுதரும் அவர்க்கு இங்கே யான் உண்டகள்ளே

(5725)

எனவரும் பாடலாகும். நினைந்த அளவிலே களிப்பினை யடைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சியை எய்துதலும்