பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

 கள்ளுண்டார்க்கு இல்லை. இவ்விரு தன்மையும் காமமுடையார்க்கே உண்டு என்பார், திருவள்ளுவர். 'உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல், காமத்திற்குண்டு' என்பது திருக்குறள். உணர்வு அழியாத நிலை களித்தலெனவும், உணர்வழிந்த நிலை மகிழ்த லெனவும் வேறுபாடு காட்டுவர் பரிமேலழகர். கள்ளுண்டாள் எனப்புகன்றார் என்னும் தொடரில் "கள்" எனப்பட்டது, அறியாமையைத் தரும் மதுவினை கனகசபையிற் கண்டதும் சிற்சபையில் உண்டதும் ஆகிய கள் என்றது இறைவனது அருண்ஞானமாகிய இனிய தேனினை. "அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ" (276) நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும், எப்போதும், அனைத் தெலும் புள்நெக ஆனந்தத்தேன் சொரியும் குனிப்புடை யானுக்கே (217) எனவரும் திருவாசகத் தொடரில் குறிக்கப்படும் சிவானந்தத் தேனினை மயக்கத்தை விளைப்பதாய், உலகத்தாரால் உண்ணப்படும் கள்ளினை மாயக்கள் எனவும், உடம்பினுள்ளே கோயில் கொண்டருளிய இறைவனது மெய்ஞ்ஞானமான திருவடித்தாமரையில் ஊற்றெடுத்துப் பெருகும் பேரின்பமான தேனை மெய்ஞானக்கள் எனவும் வேறுபிரித்து உணர்த்தும் முறையில் அமைந்தது,

காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென்றுந்தீபற
வறட்டுப் பசுக்களென்றுந்தீபற

(திருவுந்தியார் 43)

எனவரும் திருவுந்தியாராகும். தன் ஆருயிர்த் தலைவனாகிய இறைவனோடு தான் அணைந்த காலத்தில் பெற்ற பேரின்ப அநுபவம் பிறருக்குச் சொல்லால் வெளி யிட்டுரைக்க வொண்ணா தென்பதனையும், அதனை உள்ளவாறு அநுபவித்தவராலேயே உணரமுடியு