பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378



நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
     நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
     இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
     சங்கரன் நற்சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
     கொய் மலர்ச் சேவடியிணையே குறுகினோமே!

என அப்பரடிகள் அருளிய மறுமாற்றத் திருத்தாண்டகமாகும். இதனையுளங் கொண்டு தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார்,

பூமியில் எவர்க்கும் இனிஅடிமைசெய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்!

எனப் பாடிய சுதந்தரப் பாடல் உலகியலிற் பெறுதற்குரிய பல்வேறு சுதந்தரங்களுக்கும் அடிப்படையாகிய திருவருட் சுதந்தரத்தின் இன்றியமையாமையினை நன்கு தெளிவு படுத்தல் காணலாம்.

இவ்வாறு உலக மக்கள் அனைவரும் இவ்வுலகில் நிலைபேறுடைய உண்மையான சுதந்தரவுணர்வினைப் பெற்று இனிது வாழ்தல் வேண்டும் எனத் திருவுளங் கொண்ட இராமலிங்க வள்ளலார், அருட் பெருஞ் சோதியாண்டவரை நோக்கி வேண்டிய மேற்குறித்த விண்ணப்பத்தின் வாயிலாக உலகமக்கள் அனைவர்க்கும் உரியதாக அறிவுறுத்தப் பெற்ற சுதந்தரவுணர்வினை நூறாண்டுகளுக்கு முன் சுதந்தரம்பெற உழைத்த பிற நாட்டறிஞர்கள் கூட இவ்வாறு சிந்தித்து வெளிப் படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே உலக மக்கள் அனைவரும் தம்முள் இகலின்றிச்