பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392


பாடல் தோறும் 'புகலிநிலாவிய புண்ணியனே! மிழலை விண்ணிழிகோயில் விரும்பியது என் கொல்சொல்லாய்' எனப் பிள்ளையார் இறைவனை நோக்கி வினவிப் போற்றுவதுடன் இப்பதிகத்தின் ஒன்பதாம் திருப்பாடலில், 'எறிமழுவோடிளமான் கையின்றி யிருந்தபிரான் இது என் கொல் சொல்லாய்' (1-4-9) எனவரும் தொடரால் மானும் மழுவுங் கைக்கொள்ளாது வீற்றிருந்தருளும் தோணியப்பரது திருவுருவத்தை வீழிமிழலையிற் கண்ட அற்புத நிகழ்ச்சியையும் வெளியிட்டருளிய திறம் உளங் கொளத் தக்கதாகும்.

இவ்வரலாற்று நிகழ்ச்சியைத் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது,

ஏழியல் பண்பெற் றமுதோடளாவி
     இலங்கு தமிழ்க்
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக்
     கிளர்ந்த நற்சீர்
வீழியில் தம்பதிக் கேவிடை கேட்க
     வெற்பாளுடனே
காழியில் தன்னுருக் காட்டினரால்எம்
     கடவுளரே!

(827)

எனவரும் 'திருவருள் வழக்க விளக்க”ப் பாடலாகும்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்துடன் திருவீழிமிழலையில் தங்கியிருந்த போது பஞ்சம் உண்டாக, வீழிமிழலைப் பெருமான் அடியார்களின் பசிநீங்க, பஞ்சம் நீங்கும் வரையிலும், அவ்விரு பெருமக்களுக்கும், நாள்தோறும் படிக்காசு வழங்கியருளினான் என்பது வரலாறு. இச் செய்தியை,