பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

399


படி காலத்தால் தடைப்பட்டேன். ஆதலால் இந்நாளிலே வருந்தும்படி நின்னைப் பலமுறையும் வேண்டிக் கொள்வேனாயினேன்" என வள்ளலார் இறைவனை நோக்கிக் கூறுகின்றார். திருஞானசம்பந்தப் பிள்ளையார் தம் திருமணம் காண வந்தார் அனைவருக்கும் வீடுபேறளித்த அருள் வண்மையை நினைந்து போற்றுவது மேற்குறித்த சிவநேச வெண்பாவாகும். ஞானசம்பந்தப்பிள்ளையாரை இளம்பருவத்திலேயே குருவாகக் கொண்ட வள்ளலார், பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களை நாள்தோறும் ஓதிவருவதனை மரபாகக் கொண்டவரென்பதும், அவ்வாறு ஒதிவரும் நாளில் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் முதல் திருப்பதிகத்தின் திருக்கடைக் காப்புப் பாடலாகிய,

அருநெறிய மறைவல்ல முனியகன்
     பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமா புரமேவிய
     பெம்மான் இவன்றன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞான
     சம்பந்தன் னுரைசெய்த
திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினை
     தீர்தல் எளிதாமே.

(1–1–11)

எனவரும் பாடலை இறைவன் குறிப்பித்தருளினன் எனவும், அப்பாடலின் நுண் பொருளை நெடுநாள் தெரியாதிருந்த தாம், உயிர்க்குயிராய் இறைவன் மீண்டும் உள் நின்றுணர்த்த அப்பாடலிற் குறிக்கப்பட்ட பெருநெறி என்ற தொடர்ப்பொருளைத் தாம் உள்ளவாறு அறிந்து கொண்டதாகவும். ஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களாகிய திருநெறிய தமிழ் கால வேறுபாட்டால் மாறுபடாத தெய்வத் தன்மைவாய்ந்த தமிழ்மறையாகும் என்பதனைப் பிற்காலத்தில் உணர்ந்து