பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406


திருத்திப் பணி கொள்ளுதற்குரிய பொன்மொழியாக விளங்குவது, சம்பந்தர் அருளிய அத்தொடர் மொழி என்றும், அம்மொழியை உலகத்தார் கூறும் மற்றை மொழிகளைப் போன்று புறக்கணித்து மறந்து விடலாகா தென்றும் தமது நெஞ்சத்திற்கு அறிவுறுத்தும் முறையிலமைந்தது,

'சம்பந்தர்
அற்றவருக்கு அற்றசிவனாமெனுமப் பொன்மொழியை
மற்றை மொழி போன்று மறந்தனையே'

(1963--525)

எனவரும் நெஞ்சறிவுறுத்தல் கண்ணியாகும்.

அம்மையப்பனாகிய இறைவனைத் "தாயானைத் தந்தையெனக்காயினானை" (3951) எனப்போற்றுவர் வடலூர் வள்ளலார். 'தாயும் நீயே தந்தை நீயேசங்கரனே' (1-50-7) என்பது ஆளுடைய பிள்ளையார் வாய்மொழியாகும். இறைவன் விழிப்பு நிலையிலும் உறக்க நிலையிலும் கனவு நிலையிலும் தமக்குத் தோன்றியருள் புரிந்த திறத்தை,

"நனவினும் கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை"

(3966)

எனவரும் தொடரில் பரவிப் போற்றுவர் வள்ளலார்.

இத் திருவருட்பாத் தொடர்,

"நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்கு வந்தெய்தும் நின்மலன்"

(3-21-1)

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தை அடிஒற்றி யமைந்தது.