பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


உறையும் தெய்வம் எனப்பொருள் கொள்ளுதற்கும் இடம் உண்டு. "வல்வேற் கந்தன் நல் இசை உள்ளி" (புற நானூறு-38) என வரும் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் கந்தன்” என்பது சங்க காலத்திலேயே தெய்வப்பெயராக மக்களுக்கு இட்டு வழங்கப் பெற்றது என்பது உய்த்து உணரப்படும்.

குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனை நிலம்கடந்த நிலையில் முழுமுதற் கடவுளாகப் போற்றப் பெறும் சிவபெருமானுடைய திருமகனாகக் கொண்டு வழிபடும் நிலை ஏற்பட்டபின் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புற்த்தும் முருகப் பெருமானின் திருவுருவம் இடம் பெறுவதாயிற்று. இவ்வாறே முருகப் பெருமான் திருக்கோயில்களில் முதல்வனது தந்தை என்ற முறையில் சிவலிங்கத் திருவுருவமும், தாய் என்ற முறையில் கொற்றவை திருவுருவமும், தாய்மாமன் என்ற முறையில் திருமால் திருவுருவமும் இடம் பெறுவனவாயின. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தில், திருவாவினன்குடி, திருவேரகம், திருச்செங்கோடு முதலிய குன்றுகள் சங்க காலமுதல் முருகப்பெருமானுக்குரிய சிறப்புடைய திருக்கோயில்களாக வழிபடப்பெறும் தொன்மை உடையனவாகத் திகழ்கின்றன.

இற்றைக்கு ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகட்கு முன் மதம் என்ற சொல், சமயக் கொள்கை என்ற பொருளில் வழங்கப்பெறவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்னர்த் தோன்றிய மணிமேகலையில் தான் ‘சமயம்’ என்ற சொல் முதன் முதல் ஆளப்பெற்றுள்ளது கடவுளைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ உயிர்களைப் பற்றியோ மக்கட் குழுவினர் கொண்ட கொள்கையி