பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iii


மலிவு விலையில் வழங்குகிறது. குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்கள் இயற்றிய 'அருட்பிரகாச வள்ளலார்' எனும் அரிய ஆய்வுநூலைப் பதிப்பித்து வெளியிட்டது. அறிஞர் வ. சுப. மாணிக்கனார் அதன் பன்முக நலங்களைப் பாராட்டியுள்ளார்கள்.

திருவருட்பாச் செம்பதிப்புப்பணி தொடர்கிறது. மனுமுறைகண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம், அருட்பெருஞ்சோதி அகவல், ஆகிய இம்மூன்றும் கையடக்கப் பதிப்பாகவும், பையடக்கப் பதிப்பாகவும், மலிவுவிலைப் பதிப்பாகவும் செம்பதிப்பு வரிசையில் உருவாகின்றன.

இப்பொழுது திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் கலைமாமணி க. வெள்ளைவாரணனார் அவர்களின் திரு வருட்பாச் சிந்தனை ஒளி பரப்புகிறது. வள்ளலார் இயக்கத்தில் கொள்கைகள் கோட்பாடுகள், தத்துவங்கள், அறநெறிகள் செவ்விய முறையில் விளக்கப் பெறுவதால்தான் அவ்வியக்கம் வேர் ஊன்றுகிறது; விழுது பரப்புகிறது. நல்ல ஆய்வு நூல்களே இயக்கத்திற்கு அடிப்படைகள். இயக்கம் சிறக்க முழங்கும் சங்கங்கள், இயக்கம் ஒளிபரப்ப ஆற்றல் நல்கும் சுடர்கள். அவ்வகையில் வாரணனார் நூல், வாரணம் போன்ற கருத்து வலிமையும் பருமையும் பெருமையும் உடைய செந்நூல்.

காலமெல்லாம் தமிழுக்கு உழைக்கும் புதிய வன்தொண்டர் வாரணனார். தமிழ் காக்கும் படைவீரர்; தமிழ்மரபு பேணும் மறவர்; தொல்காப்பியக் கல்வியில் வல்லவர்; சங்க இலக்கியக் கல்வியில் தகைமைசால் புலமையாளர்; திருமுறைக் கல்வியில் தெளிந்த தேர்ச்சி மிக்கவர்; இம்மூன்றிலும் முறையான புலமை பெற்ற முதுபெரும் புலவர். அவர்கள் தம் நுண்மாண் நுழை